Thursday 2 June 2011

மறதி

மனித குலத்திற்கு கிடைத்த
மகத்தான சொத்து!
காலத்தால் ஏற்பட்ட இரணங்களை
கரையச் செய்ய மறதி அவசியமே!
மன்னிக்கும் மகத்தான பண்பிற்கு
மாண்புமிகு மறதி அவசியமே!
மறதி! மட்டும் இல்லாவிட்டால்
மனித இனத்திற்கு ஏது
மட்டற்ற மகிழ்ச்சி!.

நினைவில் சிறை!

கண்ணுக்குள் சிறை வைத்தால் என்
கண்ணீரில் வெளியேறி விடுவாய்!

கைகளில் சிறை வைத்தால்
காரணமேயின்றி
காற்றோடு போவாய் நீ!

மனதில் சிறை வைத்தால்
மதி மயங்கிப் போவாய் நீ!  என்
நினைவுகளில் உன்னை சிறைப்பிடித்தால்
நீங்காமல் இருப்பாய் அல்லவா!

கண்ணியம் காப்பாயா?

பாதம் பார்த்து நடந்த
பாரதப் பெண் எங்கே!

சொல்லாமல் சூரியனைக் கட்டிய
சுடர் விழியாள் எங்கே!

மாமுனியையே மண்ணைக் கவ்வ வைத்த
மாசற்ற மகளிர் எங்கே!

முக்கடவுளையும் முகம் பார்த்து சிரிக்கும்
மழலையாக் மாற்றிய மங்கை எங்கே!


"நாகரீகம்" என்ற நச்சுக்காற்றை
நுகரும் நங்கையே! உனது அகராதியில்
தொட்டுப் பேசுவது தோஷம் இல்லை தான் - இது
தொடர்ந்தால் தொல்லைதான்!

எதை விற்று? எதை வாங்கத் துடிக்கிறாய்?
இளைய சமுதாயமே!
வைரங்களை விற்று கண்ணாடித் துண்டுகளையா?
"வம்பு" பேச வரவில்லை நான்!
வரும் இடர் உரைத்தேன்!
அவ்வளவு  தான்!

Sunday 1 May 2011



ஆதவன் மறைவும் ஆடவன் வியப்பும் தோன்றிய இடம் அழகிய அந்தமான் .