பாதம் பார்த்து நடந்த
பாரதப் பெண் எங்கே!
சொல்லாமல் சூரியனைக் கட்டிய
சுடர் விழியாள் எங்கே!
மாமுனியையே மண்ணைக் கவ்வ வைத்த
மாசற்ற மகளிர் எங்கே!
முக்கடவுளையும் முகம் பார்த்து சிரிக்கும்
மழலையாக் மாற்றிய மங்கை எங்கே!
"நாகரீகம்" என்ற நச்சுக்காற்றை
நுகரும் நங்கையே! உனது அகராதியில்
தொட்டுப் பேசுவது தோஷம் இல்லை தான் - இது
தொடர்ந்தால் தொல்லைதான்!
எதை விற்று? எதை வாங்கத் துடிக்கிறாய்?
இளைய சமுதாயமே!
வைரங்களை விற்று கண்ணாடித் துண்டுகளையா?
"வம்பு" பேச வரவில்லை நான்!
வரும் இடர் உரைத்தேன்!
அவ்வளவு தான்!